நாட்டில் தங்கவிலை நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில், நேற்றைய தினத்துடன் (29) ஒப்பிடுகையில், இன்று (30) தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதுமில்லை என்று இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரத்தைப் பொறுத்தவரை, 24 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ.318,000 என விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ.294,000 என விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.39,750 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.36,750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை
