நாட்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 57 பேர் காயம்!
பொத்துவில் பகுதியில் இன்று ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பை நோக்கி சுற்றுலா சென்றிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொத்துவில் கோமாரி பகுதியில் உள்ள பாலம் அருகே, பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததே விபத்துக்குக் காரணமாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
