நாட்டு மக்களுக்கு இலங்கை வங்கிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

வங்கிக் கணக்குகள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மோசடியாளர்கள், வங்கி பயனர்களை தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை திருடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட போலி வங்கி வலைத்தளங்களுக்கு வழிநடத்தி வருகின்றனர்.

மோசடியான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மோசடி இணைப்புகளை அனுப்பி, அவர்களை போலி வலைத்தளங்களுக்கு ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர்.

இந்த தளங்கள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வ வங்கிகளின் இணையதளங்களை ஒத்திருக்கும் வகையில் மாற்றப்பட்ட எழுத்துகள் அல்லது அதனைப்போன்ற பெயர்களைப் பயன்படுத்துகின்றன என வங்கிகள் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளன.

எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கும் வகையில், அதிகாரப்பூர்வ வலைத்தள முகவரிகளை நேரடியாக உலாவிகளில் தட்டச்சு செய்யுமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், உள்நுழைவு விபரங்களை உள்ளிடுவதற்கு முன் இணைய முகவரியை (URL) கவனமாக சரிபார்க்க வேண்டும்.  

சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல்பாடும் உருவாகும் பட்சத்தில், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களுக்கு வங்கிகள் வலியுறுத்தியுள்ளன.