அதிகாலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து

கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29.08.2025) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் தொடரப்பட்டு வருகின்றன.