முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது தொடர்பில் வெளியான தகவல்
அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கிடையே, விசாரணைகளுக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பந்தமாக, அவரை இன்று விசாரணைக்காக அழைத்திருந்ததாகவும், அவர் தொடர்பான விசாரணைகள் தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க லண்டனுக்கு அரச நிதியை பயன்படுத்தி பயணம் செய்ததாகவே அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், நீதவான் தமது அதிருப்தியை மன்றில் வெளிப்படுத்தியதோடு, தனது பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். அதேவேளை, இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.