வணிக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

அதிக விலைக்கு பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலையை மீறி குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்கள் மீது, அது குளிர்விக்கப்பட்டதா அல்லது வேறு வர்த்தக நாமத்தில் விற்பனையாகிறதா என்பதைக் கருத்தில் கொள்ளாமல், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்தா சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி சபையால் அங்கீகரிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்தா சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி போத்தல் குடிநீரை விற்பனை செய்வது ஒரு சட்டவிரோத செயற்பாடாகும் என்றும், இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறும் செயல் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதற்கு இணங்காத எந்தவொரு விற்பனையாளருக்கும் எதிராக, நுகர்வோர் விவகார அதிகார சபை உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது எனவும், அவ்வாறு சட்டத்தை மீறும் செயற்பாடுகள் கடுமையாக எதிர்கொள்வதோடு, உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.