அரசாங்கமானது வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டண அறவிட தீர்மானம்!
பயணிகள், வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்துவதை அரசாங்கம் அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயணச்சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் இந்த கட்டண செலுத்தும் முறை நடைமுறையில் கொண்டுவரப்படும்.
இது தொடர்பாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த திட்டம் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் வசதியும் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.