இலங்கை வரலாற்றில் 3 இலட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

இலங்கை வரலாற்றில் இன்று (08) முதன்முறையாக 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.300,000 ஐத் தாண்டியுள்ளது.  

இந்த திடீர் உயர்வு நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (08) தங்க விற்பனை தரவுகளின்படி, தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் மூன்று முறைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (07) 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.290,500 ஆக இருந்த நிலையில், இன்று (08) அது ரூ.303,400 ஆக அதிகரித்துள்ளது.  


இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ.314,000 இருந்ததிலிருந்து இன்று ரூ.328,000 ஆக உயர்ந்துள்ளது.  


இன்றைய தினத்தில் மட்டும் தங்க விலை மூன்று தடவைகள் அதிகரித்துள்ளதுடன், அவை பின்வருமாறு பதிவாகியுள்ளன:


இன்று காலை

  - 22 கரட் ஒரு பவுன் – ரூ.296,000  

  - 24 கரட் ஒரு பவுன் – ரூ.320,000  


இன்று முற்பகல்

  - 22 கரட் ஒரு பவுன் – ரூ.299,700  

  - 24 கரட் ஒரு பவுன் – ரூ.324,000  


இன்று பிற்பகல்

  - 22 கரட் ஒரு பவுன் – ரூ.303,400  

  - 24 கரட் ஒரு பவுன் – ரூ.328,000  

இந்த முன்னேற்றம், தங்கத்தின் சர்வதேச சந்தை விலை அதிகரிப்பின் தாக்கமாக கருதப்படுகிறது.

அதேவேளை, வரலாற்றில் முதன்முறையாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,000 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதன் தாக்கமாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை தீவிரமாக அதிகரித்துள்ளது.