விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

2025/26 பெரு போக காலத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரத்திற்கான நிதி மானியங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்காக, 2025ஆம் ஆண்டுக்கான உர நிதி மானியமாக ரூ.33,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025/26 பெரு போகத்தில் பயிரிடப்படும் என கணிக்கப்பட்டுள்ள நெல் மற்றும் பிற வயல் பயிர்களின் மொத்த பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு, உரத்திற்கான நிதி மானியத்துக்காக மேலும் சுமார் ரூ.5 பில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு செய்ய தேவையுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின்படி, உரத்திற்கான நிதி மானியங்களை வழங்குவதற்காக கூடுதலாக ரூ.5 பில்லியனை ஒதுக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த முன்மொழிவு, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரும் இணையாகக் கூட்டாகச் சமர்ப்பித்திருந்தனர்.