அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இன்னும் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளை கொண்டு, நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பயனாளிகளின் பெயர் பட்டியல்கள் தங்களுடைய பிரதேச செயலகங்களில் பதியப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இரண்டாம் கட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள், தங்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களை பெற, உடனடியாக அந்தந்த பிரதேச செயலகங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிராந்திய மேம்பாட்டு வங்கியில் இருந்து, தங்களுக்கேற்ற வகையில் நெருக்கமான வங்கிக் கிளையைத் தேர்ந்தெடுத்து, அஸ்வெசும் பயனாளி வங்கிக் கணக்கு திறக்க தேவையான அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள்,  விரைவில் கணக்குகளைத் திறந்து, தங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.