இன்று முதல் பேருந்து கட்டணக் குறைப்பு!

இலங்கையில் பேருந்து கட்டணங்கள் இன்று முதல் 0.55% அளவில் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இது வருடாந்திர கட்டண திருத்தத்தின் ஒரு பகுதியாகும்.

முன்னதாக 2.5% கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அண்மையில் எரிபொருள் விலை உயர்ந்ததால் அந்த முடிவு திருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டணமாக,ரூ. 100 கட்டணத்திற்கு மாற்றமில்லை எனவும் வழக்கமான சேவைகளுக்கான கட்டணங்களாக, முதற்கட்டம் ரூ. 27 ஆகவும் இரண்டாம் கட்டம் ரூ. 35 ஆகவும் மூன்றாம் கட்டம் ரூ. 45 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைப்பு அனைத்து வகை பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும் — பொதுவான, அரை சொகுசு, சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகள் — பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.