இன்று விபத்தில் சிக்கிய அரச பேருந்து
சிலாபம் - புத்தளம் வீதியில், தெதுரு ஓயா பாலத்திற்கு அருகாமையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச) சொந்தமான ஒரு பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (ஜூலை 04) 11.30 மணியளவில் இடம்பெற்றது. விபத்தில் காயமடைந்த சில பயணிகள் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தின் விளைவாக, சிலாபம்–புத்தளம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்றே இந்த விபத்தில் சிக்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் தன்மை தொடர்பாக மேலதிக விசாரணைகள் சிலாபம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை