இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்
இன்று அதிகாலை 5 மணியளவில் மாவனல்லை, உதுவன்கந்த பல்பாதபகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது எதிரெதிர் திசைகளில் வந்த இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உள்ளனர்.
மாவனல்லை பொலிஸார் தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை