பேருந்து கட்டண மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் நேற்றைய தினம் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப, பேருந்து கட்டண திருத்தம் குறித்த முடிவொன்று எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகியான நவோமி ஜெயவர்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆண்டுதோறும் நடக்கும் பேருந்து கட்டண திருத்தம் இன்று (01) இருந்து நடைமுறைப்படவிருந்தாலும், எரிபொருள் விலை மாற்றம் காரணமாக தற்போது அதனை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் பேருந்து கட்டண மாற்றம் தொடர்பான இறுதி முடிவை எடுக்க தேசிய போக்குவரத்து ஆணையம் கூடி ஆலோசிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) இன்று முதல் நடைமுறைக்கு வரு புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் விலை 12 ரூபாவால்உயர்த்தப்பட்டு ஒரு லீட்டருக்கு 305 ரூபாவாக அமைந்துள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் விலை 7ரூபாவால் உயர்ந்து 185 ரூபாவாகவும், டீசல் விலை 15ரூபாவால் உயர்ந்து 289ரூபாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் 95 ஒக்டேன் மற்றும் சூப்பர் டீசலின் விலைகள் மாற்றமின்றி நீடிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.