எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
ஜூலை மாதத்தில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என லாப்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய விலைப்படி, 12.5 கிலோ சிலிண்டர் ரூ.4,100 ஆகவும் 5 கிலோ சிலிண்டர் ரூ.1,645 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எனினும், 4 ஸ்டார் யூரோ 4 ரக லங்கா சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் யூரோ 4 ரக பெட்ரோல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை