இலங்கையில் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சில அரிசி வகைகளில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எச்சரிக்கின்றனர்.

அரிசி உற்பத்தி மற்றும் கீரி சம்பா வகை அரிசி கையிருப்பு தொடர்பான துல்லியமான தரவுகள் அரசாங்கத்திடம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், கீரி சம்பாவிற்கு மாற்றாக 40,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியிலேயே, உள்நாட்டு அரிசி இருப்பு குறைபாடுகளும், விவசாயிகளின் வருமான பாதிப்பும் ஏற்படலாம் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.