இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (ஜூலை 04) தங்க விலை குறைவடைந்துள்ளது என்று கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று தங்க விலை 1,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இன்றைய விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், 24 கரட் தங்க பவுண் ரூ. 267,000 ஆகவும் 22 கரட் தங்க பவுண் ரூ 245,000 ஆகவும் 18 கரட் தங்க பவுண் ரூ. 200,500 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதன்படி, 24 கரட் (1 கிராம்) ரூ. 33,375 ஆகவும் 22 கரட் (1 கிராம்) ரூ. 30,625 ஆகவும் 18 கரட் (1 கிராம்) ரூ. 25,063 ஆகவும் உள்ளது.

தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோர்கள் தற்போதைய விலை வீழ்ச்சி நிலையில் தனது முதலீட்டினை கவனமாக மேற்கொள்ளுமாறு வியாபாரிகள் அறிவுறுத்துகின்றனர்.