நாட்டில் அமுல்படுத்தப்படும் நீர்வெட்டு!
திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்த நீர்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இந்நிலையில், நீர்வெட்டு இடம்பெறும் பகுதிகளாக, பேலியகொடை, வத்தளை ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபை எல்லைக்குள் உள்ள பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தானை மினுவாங்கொடை , கம்பஹா பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:
இலங்கை