தரம் 1 மாணவர்களின் பாடசலை அனுமதிக்கான விண்ணப்பம் வெளியானது
2026ஆம் ஆண்டுக்கான 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் தற்போது கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2026ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான செயல்முறைகள் முன்னெடுக்கப்படும்.
தகுதியுள்ள பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக இந்த விண்ணப்பங்களை நிரப்பி, அறிவுறுத்தப்பட்ட நாள்களுக்கு உள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை