இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
இலங்கையில் மீண்டும் கொவிட்-19 தொற்று பதிவாகி வரும் நிலையில், அனுராதபுரத்தில் ஒருவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 61 வயதான நபர், ஏப்ரல் இறுதியில் உயிரிழந்துள்ளார். மேலும், அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மற்ற 5 பேரும் தற்போது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்தார்.
இந்தியாவை உட்பட ஆசிய நாடுகளில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் திரிபுகள் இலங்கையில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளதால், மக்களுக்கு அச்சமின்றி சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.