நாட்டில் இடம்பெறும் விபத்துக்களை தவிர்க்க AI தொழில்நுட்பம்


வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் கட்டுப்பாட்டு சாதனங்கள் நிறுவப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், அடுத்த இரண்டு மாதங்களில் முதற்கட்டமாக 40 பேருந்துகளில் இந்த AI சாதனங்கள் நிறுவப்படும் என தெரிவித்தார்.

இலங்கையின் போக்குவரத்து அமைப்பில் விரிவான மேம்பாட்டு முயற்சிகள் தேவைப்படுவதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், வீதிப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்தில் அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.