இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள விசா; வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை திருமணம் செய்துள்ள இலங்கையர்களுக்கு 5 வருட தற்காலிக வதிவிட விசா (TRV) வழங்கும் நடைமுறை பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விசாக்கள் இரு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால், அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, பயணங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் இடையூறுகளை ஏற்படுத்தியது.
இலங்கை சமூகத்தினரின் நீண்ட காலக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கை தூதுவர் சானக தல்பஹேவா தொடர்ந்து எடுத்த முயற்சியின் விளைவாக, விசா காலம் ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்வு, பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கை சமூகத்தின் முக்கியமான தேவைகளில் ஒன்றை பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை