பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

பொசன் வாரத்தை முன்னிட்டு, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் உள்ள சில பாடசாலைகள் இன்று முதல் ஜூன் 12ஆம் திகதி வரை மூடப்படும் என வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த முடிவு, இந்த ஆண்டு தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு இடம்பெற உள்ளதையடுத்து எடுக்கப்பட்டுள்ளது.