மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள மின்கட்டண உயர்வு தொடர்பான பரிந்துரைகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

அதற்கமைவாக, இலங்கை மின்சார சபை (CEB) முன்வைத்த 18.3% கட்டண உயர்வு திட்டம், பொது கருத்துக்கள் மற்றும் மின்சார உற்பத்தி செலவுகள் என்பவற்றின் அடிப்படையில் தற்போது இறுதி மதிப்பீட்டு கட்டத்தில் உள்ளதாகவும் மேற்படி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுகுறித்து கடந்த வியாழக்கிழமை முடிவடைந்த பொது கருத்து சேகரிப்பில் ஒன்பது மாகாணங்களிலிருந்து கருத்துக்கள் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.