டெங்கு மற்றும் சிக்குன்குனியா வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுடன் தொடர்புடைய வலி மற்றும் காய்ச்சலுக்கு, பாராசிட்டமால் (Paracetamol) மருந்தை மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,505 டெங்கு நோயாளிகள் நாட்டில் பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.