அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
தற்போது அரசின் கீழ் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 6,000 ஊழியர்களை நிரந்தரமாக நியமிக்க பொதுவான முடிவு எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (03) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்தார்.
மேலும், அந்த நிகழ்வில் நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர் பதவிக்கு 640 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
அந்தநிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் மக்களுக்கு உயர் தரமான பொது சுகாதார சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் என வலியுறுத்தினார்.
Tags:
இலங்கை