இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
சன நெரிசலான இடங்களில் செல்லும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சுவாச நோய்களின் அறிகுறிகள் உள்ளவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், சிக்கன்குன்யா மற்றும் டெங்கு அறிகுறிகள் காணப்படும்போது, ஆரம்ப நாட்களில் நுளம்பு வலையை பயன்படுத்துவது அவசியம் என்பதால், நோயின் பரவலை தடுக்கும் எனவும் தெரிவித்தார்.
பாடசாலை அல்லது அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது கைகளை நன்கு கழுவி சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். முகத்தை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கோவிட் வைரஸின் மாறுபாடுகள் பரவுவதால், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.