அதிகாலையில் பொன்னாலைப் பாலத்தடியில் விபத்துக்குள்ளாகிய வேன்!
பொன்னாலைப் பாலத்தடியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேன் ஒன்று கடலுக்குள் பாய்ந்துள்ளது. காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த வேன், வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து தவறி கடலுக்குள் சென்று விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் வாகனம் பாரியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவத்தின் போது வாகனத்தில் ஓட்டுநர் மட்டும் இருந்தார் என்பதும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:
இலங்கை