தங்கநகை வாங்கக் காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!


இலங்கையில் தங்கத்தின் தற்போதைய விலை நிலவரம் அடிப்படையில், கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (திங்கள்) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 264,000 ரூபா எனவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 244,200 ரூபா எனவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 33,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 30,525 ரூபா ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்து, ஒரு அவுன்ஸ் தங்கம் 3,315.61 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

இந்த விலை மாற்றங்கள், சர்வதேச சந்தை நிலைமை, அமெரிக்க டொலர் மதிப்பு மற்றும் உள்ளூர் தேவையை பொறுத்து வேகமாக மாறக்கூடியது.