இலங்கையில் வழமைக்கு திரும்பியுள்ள கடவுச்சீட்டு விநியோகம்!
இலங்கையில் கடவுச்சீட்டு வழங்கல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளன என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ், காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கடவுச்சீட்டு வழங்கும் கருமபீடங்கள் செயல்படுகின்றன. இது தொடர்பான அறிவிப்பை திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜா வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வாரத்தின் வேலை நாட்களில் நெரிசல் இல்லாமல் 4 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டை பெற முடியும்.
தற்போது 09 ஒரு நாள் சேவை கருமபீடங்கள், அதில் 08 சாதாரண மற்றும் 01 முன்னுரிமை கருமபீடம், முழு திறனுடன் செயலில் உள்ளன.
விண்ணப்பங்களை பிற்பகல் 2.00 மணி வரை சமர்ப்பிக்கலாம். எனவே காலை முதல் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு நாள் சேவையின் கீழ், தினமும் சுமார் 2000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தேவையான சேவைகள் வழங்கப்படும். சீரான சேவைக்காக மக்கள் அலைச்சல் இல்லாமல் தங்களது நேரத்தில் வரலாம் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.