இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய நடிகர் மோகன்லால்

தென்னிந்திய பிரபல நடிகர் மோகன்லால் இன்று (19.06.2025) இலங்கை நாடாளுமன்றத்திற்கு சிறப்பு வருகை தந்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் ‘*பேட்ரியட்*’ (Patriot) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கும் நோக்கில் கடந்த 15 ஆம் திகதி இலங்கை வந்திருந்தனர். 

இந்தியாவின் கொச்சியிலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மூலம் (விமான எண் UL-166) கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக அவர்கள் இலங்கை சென்றடைந்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள அவர்கள், இது தொழில்முறைப் பணிகளுக்கேற்ற சிறந்த இடமாக இருப்பதுடன், பணிபுரிய மிகவும் நட்பான சூழல் எனவும் மோகன்லால் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், மோகன்லால் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது வருகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடக வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.