இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ள ரயில்வே ஊழியர்கள்
இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட பல விடயங்களில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினைகள் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, ரயில்வே உயர் அதிகாரிகளுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்குப் பிறகு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை