தேங்காய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி - பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கடந்த சில மாதங்களில் ரூ.200க்கு மேல் இருந்த தேங்காயின் மொத்த விலை தற்போது ரூ.120க்கும் கீழ் குறைந்துள்ளதாக தேங்காய் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அண்மைய வரைவில் விலை ரூ.180க்குள் இருந்த நிலையில், கடந்த வாரம் திடீரென ரூ.135 முதல் 130 வரை சரிவடைந்துள்ளது.

புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு தேங்காயின் மொத்த விலை தற்போது ரூ.120க்கும் குறைவாக இருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான முக்கியக் காரணமாக, அரசாங்கம் இறக்குமதி செய்த தேங்காய் விதைகளால் உற்பத்தி அதிகரித்ததும், சந்தையில் ஏற்பட்ட கூர்மையான விலை சரிவும் கருதப்படுகின்றன.

இதனால் வியாபாரிகள் ரூ.190 முதல் ரூ.150 வரையில் கொள்முதல் செய்த தேங்காய்களை 40 நாட்களாக சேமித்து வைத்திருப்பதாகவும், விலைக் குறைவால் பெரும் இழப்புக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேநேரத்தில், மொத்த விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி நுகர்வோருக்கே பயனாக முடியவில்லை. சந்தையில் ஒரு தேங்காய் இன்னும் ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.