சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பான விசாரணையில், துன்புறுத்தல் காரணமாகவே அவர் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவு (CID) தெரிவித்துள்ளது.
குறித்த மாணவன் மன அழுத்தத்தினால் இல்லாமல் துன்புறுத்தலால் உயிரிழந்ததாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கு முந்தைய இரவு முழுவதும் மாணவர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்திற்குள் நிகழும் துன்புறுத்தல் சம்பவங்களை வெளியிட, நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்பதும் CID விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கைதாகிய மாணவர்கள் குழுவை மேலும் விளக்கமறியலில் வைக்க, பலாங்கொட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் அதன் எதிர்விளைவுகளை மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.