தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தம் குறித்து வெளியான முடிவு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படவில்லை என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

இன்று (ஜூன் 20) நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே, அமைச்சர் கூறியதாவது, 2029 ஆம் ஆண்டு வரை புலமைப்பரிசில் பரீட்சை மாற்றமின்றி நடைபெறும். 2028 ஆம் ஆண்டில், 2029க்குப் பிறகு பரீட்சை தொடர வேண்டுமா என்பதை பரிசீலிக்க சிறப்பு குழு நியமிக்கப்படும். தற்போது, பரீட்சையின் அழுத்தத்தை குறைப்பதற்கான திட்டம் பரீட்சைத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு வருகிதெனக் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிடுகையில், பள்ளிகளுக்கு இடையிலான சமத்துவத்தை உருவாக்கவும், மாணவர்களுக்கான அழுத்தத்தை குறைக்கவும் அரசாங்கம் எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளுமெனவும் கூறினார்.