இலங்கையில் மின்தடை அமுல் - வெளியான அறிவிப்பு!

நுரைச்சோலை மின் நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிகளுக்காக இன்று (13) நள்ளிரவு முதல் 25 நாட்களுக்கு நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த பராமரிப்பு காலத்தில், தேசிய மின் கட்டமைப்பில் இருந்து 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும். எனினும், மீதமுள்ள இரண்டு பிறப்பாக்கிகள் செயல்பாட்டில் உள்ளதால், மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

3வது பிறப்பாக்கி மீண்டும் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின் நிலையத்தின் 1வது பிறப்பாக்கியும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும்.

அதேவேளை, கடந்த ஒன்றரை மாதமாக பராமரிப்பில் இருந்த களனிதிஸ்ஸ மின்நிலையம், எதிர்வரும் நாட்களில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து, 165 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும் என சபை மேலும் தெரிவித்துள்ளது.