ஒரே நாளில் உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! இலங்கையிலும் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 116 அமெரிக்க டொலரால் விலை உயர்ந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,441 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது சதவீதமாக 3.4% அதிகரிப்பைக் காட்டுகிறது.

இந்த விலை உயர்வின் நேரடி விளைவாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, 24 மற்றும் 22 கரட் தங்கத்தின் உள்ளூர் விற்பனை விலைகளில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.