விமான பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக, சில வான்வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான விமான வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்கள் காரணமாக, பயண நேரம் நீடிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, லண்டனிலிருந்து கொழும்பு நோக்கி வந்த UL-504 என்ற விமானம், எரிபொருள் நிரப்ப தேவையால், தோஹாவிற்கு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோன்று, கொழும்பிலிருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட UL-501 விமானமும் மாற்றுப் பாதையில் பயணித்துவருகிறது.

மேலும் விபரங்களுக்கு, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் 1979 / +94 11 777 1979 / +94 74 444 1979 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளலாம்.