இலங்கையில் பயங்கர விபத்து; வீட்டின் கூரையை பேருந்து மோதி உடைத்து விபத்து!
இன்று (13) காலை 6.30 மணியளவில் மலுல்ல பகுதியில் ஹகுரன்கெத – அதிகரிகம சாலையில், லிசகோஸ் அருகே பயணித்த பேருந்து வழித்தடம் மாறி வீட்டு கூரையை மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தால் விபத்தில் வீட்டு கூரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்தின் போது பேருந்தில் 20 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை