யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்து!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், சிறிய ரக லொறியொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்து சனிக்கிழமை (14) மதவாச்சி பகுதியில் இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் மதவாச்சி மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

52 வயதான ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த பெண்ணின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முந்திச் செல்ல முயற்சி செய்தபோது பஸ்சின் சாரதிக்கு வண்டியை கட்டுப்படுத்த முடியாததால் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.