கொழும்பு மாநகர சபையை கைப்பற்றிய அநுர அரசு!

கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வ்ராய் கலி பல்தசார் தெரிவாகியுள்ளார். இவர் 61 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சாரூக் 54 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். மேயர் தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

இதனுடன், தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் ஹேமந்த குமாரா, கொழும்பு மாநகர சபையின் துணை மேயராக பரிந்துரைக்கப்பட்டு, எதிர்வினையின்றி தேர்வாகியுள்ளார்.

இன்று (ஜூன் 16) நடைபெற்ற மாநகர சபையின் ஆரம்ப கூட்டத்தின் போது மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான வாக்குப்பதிவும் அறிவிப்பும் இடம்பெற்றன.