தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சி!

இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்துத் தொடர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று (17) சடுதியாக குறைவடைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 1,024,098 ஆக உள்ளது. 1கிராம் 24 கரட் தங்கம் ரூ. 36,130 ஆகவும் 1 பவுண் (8 கிராம்) ரூ. 289,000 ஆகவும் 22 கரட் தங்கம் 1 கிராம் ஆனது ரூ. 33,120 ஆகவும் 1 பவுண் ரூ. 265,000 ஆகவும் பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கம் 1 கிராமானது ரூ. 31,620 ஆகவும் 1 பவுண் ரூ. 252,950 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த விலை மாற்றம், சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் டொலர் பரிமாற்ற விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.