யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி தெரிவு!


யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2025 உள்ளூராட்சி தேர்தலில், இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 13 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி (NPP) 10 ஆசனங்களையும் பெற்றனர். 

இதனைத் தொடர்ந்து, ITAK சார்பில் மதிவதனி விவேகானந்தராஜா முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவருக்கு ITAK, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB), மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. மொத்தம் 19 வாக்குகளைப் பெற்று, மதிவதனி விவேகானந்தராஜா யாழ் மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

துணை முதல்வராக ITAK உறுப்பினர் இமானுவேல் தயாளன் தெரிவாகியுள்ளார்.