நாட்டில் இன்று இடம்பெற்ற விபத்து!

கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகிலுள்ள வீதியில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.