இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சி - மின் கட்டணம் 15% ஆல் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% ஆல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.  

இந்நிலையில், இந்த புதிய மின்சாரக் கட்டண திருத்தம் நாளை (12) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.