இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் கடந்த 9ஆம் திகதி வெளியிட்ட தரவுகளின்படி,  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 988,455.39 ஆகவும் இது இலங்கை ரூபாவில், 10 இலட்சம் என்ற வரம்பை நெருங்கியுள்ளது.

 24 கரட் தங்கப் பவுண் ரூ. 2,80,000க்கும் அதிகமாகவும் (அறிக்கையின்படி ரூ. 2,79,000 வரை பதிவாகியுள்ளது) 22 கரட் தங்கப் பவுண் ரூ. 2,65,000க்கும் அதிகமாகவும் (முந்தைய விலை – ரூ. 2,56,000) பதிவாகியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை, சாதாரண தங்க விலையைவிட அதிகமாக இருக்கலாம்.  

தங்க நகைகள் வாங்க விரும்புவோர் சந்தை நிலவரங்களை கவனமாக மதிப்பீடு செய்து, விலையாசைகள் மிகுந்த காலங்களில் கொள்வனவில் ஈடுபட வேண்டாம் என வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.