கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து!
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்தொன்று, வெல்லம்பிட்டி பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று (11) காலை வெல்லம்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் மிதொடமுல்ல சந்தி இடையே ஏற்பட்ட விபத்தில் 15 பேர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் லொறிகள் உள்ளிட்ட நான்கு வாகனங்களுக்கு கடுமையான சேதமும் ஏற்பட்டுள்ளன.
இவ்விபத்து ஏற்பட்டபோது லொறிகள் ஒரு வன்பொருள் நிறுவனத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன. பேருந்து லொறியுடன் மோதி, அதனால் மற்ற லொறிகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை