முதலாவது பயணத்தை முன்னெடுத்த இலங்கையின் புதிய விமானம்!

பிரான்ஸில் இருந்து இலங்கை பெற்றுக்கொண்ட புதிய A330-200 வகை எயார் பஸ் விமானம், இன்று (21) தனது முதல் சர்வதேச பயணத்தை மாலே நோக்கி மேற்கொண்டது.

இது குறித்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவன தொடர்பு தலைவர் தீபால் பெரேரா தெரிவித்ததாவது, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1.48 மணிக்கு விமானம் புறப்பட்டது எனக் கூறினார்.

மாலைதீவின் மாலே சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இருந்து கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்த விமானம், தேவையான பதிவு மற்றும் சர்வதேச ஒப்புதல்கள் உள்ளிட்ட முக்கிய செயற்கைச் செயல்முறைகளை பூர்த்தி செய்த பின்னர் தனது முதல் பயணத்தை முன்னெடுத்தது.