நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23.06.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், மேல், வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில், மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதனால், பொதுமக்கள் மின்னல் தாக்கங்கள் உள்ளிட்ட அபாயங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.