நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு !
இலங்கை சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி* குற்றம் சுமத்தியுள்ளது.
நுகர்வோர் மற்றும் கடை உரிமையாளர்கள் சந்தையில் எரிவாயு பெற்றுக்கொள்வதில் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தொடர்பு கொள்ளப்பட்டபோது, எரிவாயு பற்றாக்குறை நிலைமை உள்ளதாக நிறுவனம் சுயமாக ஏற்றுக்கொண்டது.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் பல பகுதிகளில் இந்த நிலைமையை சீரமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நுகர்வோர் அவசர தேவைகளுக்கு முன்கூட்டியே தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை